Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூலை 07 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.
சுவிற்ஸர்லாந்துடனான சனிக்கிழமை (06) நடைபெற்ற காலிறுதிப் போட்டியானது வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்த நிலையில் பெனால்டியில் 5-3 என்ற ரீதியில் வென்றே அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.
இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை புகாயோ ஸாகா பெற்றதோடு, சுவிற்ஸர்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை பிறீல் எம்பொலோ பெற்றிருந்தார்.
பெனால்டியில் சுவிற்ஸர்லாந்தின் மனுவல் அகஞ்சியின் பெனால்டியை இங்கிலாந்தின் கோல் காப்பாளர் ஜோர்தான் பிக்ஃபோர்ட் தடுத்த நிலையில், பேபியன் ஸ்கார், ஸ்கொட்ரான் ஷக்கிரி, ஸெகி அம்டெளனி ஆகியோர் பெனால்டியை உட்செலுத்திய போதும் இங்கிலாந்தின் கோல் பல்மர், ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ ஸாகா, இவான் டோனி, ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்ட் பெனால்டிகளை உட்செலுத்திய நிலையில் 5-4 என்ற ரீதியில் வென்ற இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
57 minute ago
1 hours ago