2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

சிற்றி செல்லும் டொன்னருமா?

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 24 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் கோல் காப்பாளரான ஜல்லூயிஜி டொன்னருமாவைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபியக் கழகமான அல்-இத்திஹாட்டுக்கு சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் செல்வாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே அவரை 25 வயதான டொன்னருமா மூலம் பிரதியிட சிற்றி எதிர்பார்க்கின்றது.

இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனில் ஆறு ஆண்டுகள் இருந்த பின்னர் 2021ஆம் ஆண்டு பரிஸ் ஸா ஜெர்மைனில் இணைந்த டொன்னருமா, பரிஸ் ஸா ஜெர்மைனுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .