2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிம்பாப்வேயைத் தோற்கடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 11 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் சிம்பாப்வேயும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றிருந்த நிலையில் ஹராரேயில் புதன்கிழமை (10) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ஷுப்மன் கில் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, கில்லின் 66 (49), ருத்துராஜ் கைகவாட்டின் 49 (28), யஷஸ்வி ஜைஸ்வாலின் 36 (27), சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காத 12 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சிகண்டர் ராசா 4-0-24-2, பிளஸிங் முஸர்பனி 4-0-25-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, டியோன் மையர்ஸின் ஆட்டமிழக்காத 65 (49), கிளைவ் மடன்டே 37 (26), வெலிங்டன் மசகட்சாவின் ஆட்டமிழக்காத 18 (10) ஓட்டங்களுடன் போராடியபோதும் ஆவேஷ் கான் (2), கலீல் அஹ்மட், வொஷிங்டன் சுந்தரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியின் நாயகனாக சுந்தர் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .