Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 30 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், குரோஷியக் கழகமான டினமோ ஸக்ரேப்பின் மைதானத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் தோற்றபோதும் இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்கான தகுதிகாண் போட்டிக்குத் தகுதி பெற்றது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டியன் புலிசிச் பெற்றதோடு, ஸக்ரேப் சார்பாக மார்டின் பதுரினா, மார்கோ பிஜாக்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றபோதும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றின் தகுதிகாண் போட்டிக்குத் தகுதி பெற்றது. பெய்பிக்கா சார்பாக வன்கெலிஸ் பவ்லிடிஸ், ஒர்குன் கொக்சு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தோற்றபோதும் அவ்வணி ஏற்கெனவே இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஸ்பானிய லா லிகா கழகங்களான பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல், அஸ்தன் வில்லா, மன்செஸ்டர் சிற்றி இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் ஆகியன நேரடியாக இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
இதேவேளை இத்தாலிய சீரி ஏ கழகங்களான அத்லாண்டா, ஏ.சி மிலன், ஜுவென்டஸ்ம் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகங்களான பொரூசியா டொட்டமுண்ட், பயேர்ண் மியூனிச், நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட், பிரெஞ்சு லீக் 1 கழகங்களான பரிஸ் ஸா ஜெர்மைன், மொனாக்கோ உள்ளிட்டவை இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்கான தகுதிகாண் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
3 hours ago