Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 06 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
லாகூரில் புதன்கிழமை (05) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, றஷின் றவீந்திரவின் 108 (101), கேன் வில்லியம்சனின் 102 (94), கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத 49 (27), டரைல் மிற்செல்லின் 49 (37) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 363 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, மற் ஹென்றி (2), அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் (3), றவீந்திர, மிஷெல் பிறேஸ்வெல், பிலிப்ஸிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களையே பெற்று 50 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 100 (67), றஸி வான் டர் டுஸன் 69 (66), அணித்தலைவர் தெம்பா பவுமா 56 (71), ஏய்டன் மார்க்ரம் 31 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக றவீந்திர தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago