2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கம்மின்ஸின் ஹட்-ட்ரிக்கோடு வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 21 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அன்டிகுவாவில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு ஒன்று சுப்பர் – 8 சுற்றுப் போட்டியொன்றில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறையில் 28 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியாவின் அணித்தலைவர் மிற்செல் மார்ஷ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், மிற்செல் ஸ்டார்க், அடம் ஸாம்பா (2), கிளென் மக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், பற் கமின்ஸிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களையே பெற்றது. இதில் 18ஆவது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் மகமதுல்லா, மஹெடி ஹஸனின் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கம்மின்ஸ், 20ஆவது ஓவரின் முதலாவது பந்தில் தெளஹிட் ஹிரிடோயின் விக்கெட்டைக் கைப்பற்றி ஹட்-ட்ரிக் சாதனையை ஏற்படுத்தினார். துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 41 (36), ஹிரிடோய் 40 (28) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 141 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா டேவிட் வோர்னர், ட்ரெவிஸ் ஹெட் மூலம் வேகமாக ஓட்டங்களைச் சேகரித்த நிலையில், 31 (21) ஓட்டங்களுடன் ஹெட்டும், அடுத்து வந்த மார்ஷும் ரிஷாட் ஹொஸைனிடம் வீழ்ந்தனர்.

இந்நிலையில் 11.2 ஓவர்களில் வோர்னரின் ஆட்டமிழக்காத 53 (35), மக்ஸ்வெல்லின் ஆட்டமிழக்காத 14 (06) ஓட்டங்களுடன் 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழையால் போட்டி முடிவுக்கு வந்த நிலையில் அப்போது டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறையில் 73 ஓட்டங்களைப் பெற்றிருக்க வேண்டிய அவுஸ்திரேலியா 28 ஓட்டங்களால் வென்றது. பந்துவீச்சில் மஹெடி ஹஸன் 4-0-22-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக கம்மின்ஸ் தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .