Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2025 மார்ச் 26 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ராஜஸ்தான் றோயல்ஸுக்கெதிரான போட்டியில் அவ்வணியை 151 ஓட்டங்களுக்குள் கொல்கத்தா சுருட்டியுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தாவின் அணித்தலைவர் அஜின்கியா ரஹானே, ராஜஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், வைபவ் அரோரா (2), வருண் சக்கரவர்த்தி (2), மொயின் அலி (2), ஹர்ஷித் ரானா (2), ஸ்பென்ஸர் ஜோன்ஸனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் துருவ் ஜுரேல் 33 (28), யஷஸ்வி ஜைஸ்வால் 29 (24), அணித்தலைவர் ரியான் பராக் 25 (15), ஜொஃப்ரா ஆர்ச்சர் 16 (07) ஓட்டங்களைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
49 minute ago
55 minute ago