2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட பெங்களூரு

Shanmugan Murugavel   / 2024 மே 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேறியுள்ளது.

அஹமதாபாத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான வெளியேற்றப் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான தகுதிகாண் போட்டிக்குத் தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்ஸன் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு, குறிப்பிட்ட இடைவெளிகளில் ட்ரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹால், இரவிச்சந்திரன் அஷ்வின் (2), ஆவேஷ் கான் (3), சந்தீப் ஷர்மாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ரஜாட் பட்டிடார் 34 (22), விராட் கோலி 33 (24), மஹிபால் லொம்ரோர் 32 (17), கமரன் கிறீன் 27 (21) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், லொக்கி பெர்கியூசன், கமரன் கிறீன், கரண் ஷர்மா, ரண் அவுட், மொஹமட் சிராஜ்ஜிடம் (2) குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தபோதும் யஷஸ்வி ஜைஸ்வாலின் 45 (30), ரியான் பராக்கின் 36 (26), ஷிம்ரோன் ஹெட்மயரின் 26 (14) ஓட்டங்களோடு 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கையடைந்து இரண்டாவது தகுதிகாண் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியின் நாயகனாக அஷ்வின் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .