2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வென்ற பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2024 மே 16 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் புதன்கிழமை (15) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தானின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ஆரம்பத்திலேயே யஷஸ்வி ஜைஸ்வாலை அணித்தலைவர் சாம் கர்ரனிடம் இழந்தது. பின்னர் அடுத்தடுத்த ஓவர்களில் சாம்சன், டொம் கொஹ்லர்-கட்மோரேயையும் நாதன் எலிஸ், ராகுல் சஹரிடம் இழந்தது.

அடுத்து வந்த ரியான் பராக்கும், இரவிச்சந்திரன் அஷ்வினும் ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 28 (19) ஓட்டங்களுடன் அர்ஷ்டீப் சிங்கிடம் அஷ்வின் வீழ்ந்தார். அடுத்த ஓவரிலேயே கர்ரனிடம் வந்த வேகத்திலேயே துருவ் ஜுரேல் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரில் சஹரிடம் றொவ்மன் பவல் வீழ்ந்தார்.

ஜுரேலுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய டொனவன் பெரைரா பட்டேலிடம் சிறிது நேரத்தில் வீழ்ந்ததுடன், பட்டேலின் இறுதி ஓவரில் 48 (34) ஓட்டங்களுடன் பராக்க்க்கும் அவரிடம் விழ 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை ராஜஸ்தான் பெற்றது.

பதிலுக்கு 145 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், ட்ரெண்ட் போல்டின் முதலாவது ஓவரிலேயே பிரஹ்சிம்ரன் சிங்கை பறிகொடுத்தது. ஆவேஷ் கான் வீசிய ஐந்தாவது ஓவரில் றைலி றொஸோ, ஷஷாங் சிங் ஆகியோர் வீழ்ந்தனர். இரண்டு ஓவர்களில் யுஸ்வேந்திர சஹாலிடம் ஹொனி பெயார்ஸ்டோவும் வீழ்ந்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் ஜிதேஷ் ஷர்மாவும் சஹாலிடம் வீழ்ந்தபோதும் கர்ரனின் ஆட்டமிழக்காத 63 (41) ஓட்டங்களோடு 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பஞ்சாப் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக கர்ரன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .