2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஐ.பி.எல்:மிக மெதுவாக சதம் அடித்த கோலி

Editorial   / 2024 ஏப்ரல் 07 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.  

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய  செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ஓட்டங்கள் அடித்தார். இதையடுத்து 184 ஓட்டங்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ஓட்டங்கள்  எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ஓட்டங்களும் எடுத்தனர். ஆர்.சி.பிக்கு எதிராக பட்லர் சனிக்கிழமை (06) அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் சாதனையப் படைத்தார்.

 

இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்த ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கோலி 67 பந்துகளில் சதத்தை எட்டினார். இந்த சதம் ஐ.பி.எல்-லில் கோலியின் 8வது சதமாகும்.

 

67 பந்துகளில் சதம் கண்ட விராட் கோலி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் மணிஷ் பாண்டேவுடன் விராட் கோலி இணைந்துள்ளார்.

இந்நிலையில் ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவாக சதம் அடித்த விராட் கோலியை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜூனைத் கான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவாக 100 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இதனால் கோலி ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X