2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல் பட்டத்துக்காக ஹைதராபாத் – கொல்கத்தா மோதுகிறது

Editorial   / 2024 மே 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனில்சென்னை சேப்பாக்கம் எம்..சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது போன்று தகுதி சுற்று 1-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி சுற்று 2-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது.

2012 மற்றும் 2014-ம் ஆண்டு சாம்பியன் பட்டம்வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணி 2012-ம் ஆண்டு கோப்பையை சேப்பாக்கம் மைதானத்தில்தான் வென்றிருந்தது. அப்போது கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் தற்போது அணியின் ஆலோசகராக இருப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தனது கேப்டன் பதவி காலத்தில் காம்பீர் 2014-ம் ஆண்டும் கொல்கத்தா அணிக்கு மகுடம் சூடியிருந்தார். தற்போது ஆலோசகராக மீண்டும் ஒரு முறை கொல்கத்தா அணிக்கு பெருமை சேர்க்க அவர், களவியூகங்களை அமைத்துக் கொடுக்கக்கூடும்.

அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் சுனில் நரேன் பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார். அவருடன் தற்போது ரஹ்மனுல்லா குர்பாஸும் இணைந்துள்ள கூடுதல் வலுசேர்த்துள்ளது. தகுதி சுற்று1-ல் ஸ்யேரஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல், நிதிஷ் ராணா ஆகியோர் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்களாக திகழ்கின்றனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் தகுதி சுற்று 1-ல் கொல்கத்தா அணி திட்டங்களை களத்தில் சரியாக செயல்படுத்தி ஹைதராபாத் அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தது. மிட்செல் ஸ்டார்க் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சேர்த்துள்ளது. அவருடன் இந்திய வீரர்களான ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் சீரான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .