2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

இவ்வாண்டு பதினொருவரில் மெஸ்ஸி இல்லை

Shanmugan Murugavel   / 2024 டிசெம்பர் 10 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சர்வதேச சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான பதினொருவரில் ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி இடம்பெறவில்லை.

2006ஆம் ஆன்டுக்குப் பின்னர் முதற்தடவையாக பதினொருவரில் மெஸ்ஸி இடம்பெறவில்லை.

மெஸ்ஸியை முன்களத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் எர்லிங்க் ஹலான்ட், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் கிலியான் மப்பே, வின்ஷியஸ் ஜூனியர் ஆகியோர் பிரதியிட்டுள்ளனர்.

சக வீரர்களாலேயே இத்தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், மட்ரிட்டின் மத்தியகளவீரரான ஜூட் பெல்லிங்ஹாமே அதிகபட்சமாக 11,176 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் மட்ரிட்டின் பின்களவீரர்களான டனி கர்வகால், அந்தோனியோ ருடிகர், மத்தியகளவீரர் டொனி க்றூஸ் ஆகியோருடன் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன், மத்தியகளவீரர்களான கெவின் டி  ப்ரூனே, றொட்றி ஆகியோருடன் லிவர்பூலின் பின்களவீரர் வேர்ஜில் வான் டிஜிக்கும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X