2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

‘இவ்வாண்டில் எஞ்சியுள்ள அனைத்து டெஸ்ட்களிலும் ஷகிப்’

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு நடைபெறவுள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷின் முன்னாள் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் விளையாடுவாரென தலைமைத் தேர்வாளர் கஸி அஷ்ரஃப் ஹொஸைன் திங்கட்கிழமை (12) தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டில் பாகிஸ்தான், இந்தியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் மாத்திரமே விளையாடவுள்ளதாகவும், இந்தியாவுக்கெதிரான தொடரில் விளையாடுவது குறித்து தீர்மானிக்கவில்லையென ஷகிப் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டு டெஸ்ட்களில் நான்கிலேயே ஷகிப் விளையாடியதுடன், கனடா இருபதுக்கு – 20 தொடரிலிருந்து நேரடியாக அணியுடன் இணையவுள்ளார். தவிர கண்ணில் பிரச்சினையையும் ஷகிப் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .