2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் அணி போட்டிக்காக புறப்பட்டது

Mayu   / 2024 ஜனவரி 11 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி கபில

தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, இலங்கை 19 வயதுக்குற்பட்ட துடுப்பாட்ட அணியினர் இன்று(11) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

இளையோர் இலங்கை அணியில் 16 வீரர்களும் 10 அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழுவினர் (11) காலை 11.00 மணிக்கு கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-660 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தோஹா சென்று அங்கிருந்து தென்னாபிரிக்காவிற்கு மற்றொரு விமானத்தில் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .