2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

இலங்கையை வீழ்த்துமா அவுஸ்திரேலியா?

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 28 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது காலியில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளபோதும் பந்துவீச அதிக நேரங்களை எடுத்துக் கொள்வது அதைக் கேள்விக்குறியாக்கும்.

உஸ்மான் கவாஜாவுடன் ட்ரெவிஸ் ஹெட் அணித்தலைவராக களமிறங்குகின்ற நிலையில், ஹெட்டின் இடத்தில் ஜொஷ் இங்லிஸ் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது. மிற்செல் ஸ்டார்க், ஸ்கொட் போலண்ட், நேதன் லையனோடு மற் குனுமன் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக காயம் காரணமாக பதும் நிஸங்கவை இலங்கை தவற விடுகின்ற நிலையில் அவரைக் குழாமில் ஒஷாத பெர்ணாண்டோ பிரதியிடுவாரெனக் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X