2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 24 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியுள்ளது.

அன்டிகுவாவில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான குழு இரண்டு சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமெனத் தெரிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், மார்கோ ஜன்சன், மார்க்ரம், தப்ரையாஸ் ஷம்சி (3), கேஷவ் மஹராஜ், ககிஸோ றபாடாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றொஸ்டன் சேஸ் 52 (42), கைல் மேயர்ஸ் 35 (34), அன்ட்ரே ரஸல் 15 (09), அல்ஸாரி ஜோசப் ஆட்டமிழக்காமல் 11 (07) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு 136 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ரஸலிடம் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இரண்டு ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

பின்னர் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறையில் 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயித்த நிலையில், ஜோசப் (2), சேஸிடம் (3) விக்கெட்டுகளை இழந்தபோதும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (27), ஹென்றிச் கிளாசெனின் 22 (10), மார்க்ரமின் 18 (15), குயின்டன் டி கொக்கின் 12 (07)   ஓட்டங்களோடு 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷம்சி தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .