2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 06 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் புதன்கிழமை (05) நடைபெற்ற அயர்லாந்துடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து, அர்ஷ்டீப் சிங் (2), ஹர்திக் பாண்டியா (3), ஜஸ்பிரிட் பும்ரா (2), மொஹமட் சிராஜ், அக்ஸர் பட்டேலிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் கரெத் டெலனி 26 (14) ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு 97 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, றோஹித் ஷர்மாவின் 52 (37), றிஷப் பண்டின் ஆட்டமிழக்காத 36 (26) ஓட்டங்களுடன் 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், பென் வைட் 1-0-6-1, மார்க் அடைர் 4-0-27-1, கேர்ட்டிஸ் கம்பர் 1-0-4-0, பரி மக்கார்தி 2.2-0-18-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக பும்ரா தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .