2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

இம்மாத சிறந்த வீரர் கமிந்து மெண்டிஸ்

Editorial   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார்.

குறித்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இருவரையும் வெற்றிகொண்டு கமிந்து மெண்டிஸ் ஐசிசியின் செப்டெம்பர் மாதத்துக்கான அதி சிறந்த வீரர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

கமிந்து மெண்டிஸ், 2024ஆம் ஆண்டில் இந்த விருதை பெறும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X