2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 10 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது லோர்ட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

இப்போட்டியுடன் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவுக்கப்பட்டுள்ள விக்கெட் காப்பாளர் ஜேமி ஸ்மித், வேகப்பந்துவீச்சாளர் குஸ் அட்கின்ஸன் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஷொய்ப் பஷிர் சுழற்பந்துவீச்சாளராகவும் மற்றைய வேகப்பந்துவீச்சாளராக கிறிஸ் வோக்ஸ் விளையாடவுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி வாய்ப்பானது அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட், ஜேஸன் ஹோல்டர், ஜேடன் சியல்ஸ் அல்ஸாரி ஜோசப், ஷாமர் ஜோசப் ஆகியோரின் பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .