Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 23 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் 25 கிரிக்கெட் வீரர்களும் , 10 அதிகாரிகளும் கொண்ட குழு திங்கட்கிழமை (22) பிற்பகல் 03.54 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் UK-6107 சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
முதலாவதாக, T20 போட்டிகள் மூன்று கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27, 28 மற்றும் 30 ஆகிய திகதிகளில் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பின்னர் ஆகஸ்ட் 02, 04 மற்றும் 07 ஆகிய திகதிகளில் கொழும்பு , கெத்தாராமை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 02.30 மணிக்கு , 50 ஓவர் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
3 hours ago