2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இந்திய அணித்தலைவராக சூரியகுமார் யாதவ்

Freelancer   / 2023 நவம்பர் 21 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்திய அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ருத்துராஜ் கைகவாட் உப அணித்தலைவராகச் செயற்படவுள்ளதோடு, இறுதி இரண்டு போட்டிகளிலும் அப்போது குழாமில் இணையும் ஷ்ரேயாஸ் ஐயர் உப அணித்தலைவராகச் செயற்படவுள்ளார்.

இத்தொடரின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான வி.வி.எஸ் லக்ஸ்மன் செயற்படவுள்ளார்.

குழாம்: சூரியகுமார் யாதவ் (அணித்தலைவர்), ருத்துராஜ் கைகவாட் (உப அணித்தலைவர்), இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), யஷஸ்வி ஜைஸ்வால், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் (இறுதி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்) (உப அணித்தலைவர்), ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வொஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், ஷிவம் டுபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்டீப் சிங்க், பிரசீத் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .