Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜனவரி 30 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியானது புனேயில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றதுடன், மூன்றாவது போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில் தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியையும் இங்கிலாந்து வென்றாக வேண்டிய கட்டாயத்திலுள்ளது.
இத்தொடர் முழுவதும் சுழற்பந்துவீச்சே ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில் அடில் ரஷீட் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றார். அணியைப் பொறுத்த வரையில் பில் ஸோல்டுக்குப் பதிலாக ஜேக்கப் பெத்தெல் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மறுபக்கமாக இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரவி பிஷ்னோய்க்குப் பதிலாக அர்ஷ்டீப் சிங் அணிக்கு மீளத் திரும்புவதோடு, உடற்றகுதியைப் பெற்றால் துருவ் ஜுரெல்லை ரிங்கு சிங் பிரதியிடுவதோடு இல்லாவிடின் ஷிவம் டுபே பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago