2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 16 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கையில் 0-2 என தொடரை இழந்தவாறு வரும் நியூசிலாந்து பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பித்தாலே இந்தியாவுக்கு சவாலையளிக்க முடியும்.

அதுவும் கேன் வில்லியம்சன் இப்போட்டியை தவறவிடுகின்றமையானது நியூசிலாந்துக்கு பின்னடைவாக காணப்படுகின்றது. வில்லியம்சனை அணியில் வில் யங்க் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர மிற்செல் சான்ட்னெரை மிஷெல் பிறேஸ்வெல் பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதுதவிர டிம் செளதிக்குப் பதிலாக மற் ஹென்றி களமிறங்குவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடுகளமானது கறுப்பு மண்ணாலான மெதுவான சுழற்சியை வழங்கக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதோடு, அண்மைய நாள்களில் மழை காரணமாக வேகப்பந்துவீச்சுக்கு ஆரம்பத்தில் ஒத்துழைக்குமென நம்பப்படுகின்றது.

அந்தவகையில் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ஆகாஷ் டீப் என மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடனேயே இந்தியா களமிறங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் சுழற்பந்துவீச்சுக்கு நியூசிலாந்து தடுமாறுமென்ற நிலையில் டீப்பை குல்தீப் யாதவ் பிரதியிடக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X