2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 05 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியாவும், இரண்டாவது போட்டியை அவுஸ்திரேலியாவும் வென்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இந்நிலையில் நான்காவது போட்டியில் வென்ற அவுஸ்திரேலியா, சிட்னியில் வெள்ளிக்கிழமை (03) ஆரம்பித்து இன்று (05) முடிவுக்கு வந்த ஐந்தாவது டெஸ்டில் வென்றதன் மூலம் 3-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

ஸ்கோர் விவரம்:

இந்தியா: 185/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 40, இரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரிட் பும்ரா 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்கொட் போலண்ட் 4/31, மிற்செல் ஸ்டார்க் 3/49, பற் கமின்ஸ் 2/37, நேதன் லையன் 1/19)

அவுஸ்திரேலியா: 181/10 (துடுப்பாட்டம்: பியூ வெப்ஸ்டர் 57, ஸ்டீவன் ஸ்மித் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 3/42, மொஹமட் சிராஜ் 3/51, நிதிஷ் குமார் ரெட்டி 2/32, ஜஸ்பிரிட் பும்ர 2/33)

இந்தியா: 157/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 61 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்கொட் போலண்ட் 6/45, பற் கமின்ஸ் 3/44, பியூ வெப்ஸ்டர் 1/24)

அவுஸ்திரேலியா: 162/4 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 41, பியூ வெப்ஸ்டர் ஆ.இ 39, ட்ரெவிஸ் ஹெட் ஆ.இ 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 3/65, மொஹமட் சிராஜ் 1/69)

போட்டியின் நாயகன்: ஸ்கொட் போலண்ட்

தொடரின் நாயகன்: ஜஸ்பிரிட் பும்ரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X