2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மன்செஸ்டரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்தை வெல்வது கடினமானதாகக் காணப்படுகின்ற நிலையில் அசித பெர்ணாண்டோ, பிரபாத் ஜெயசூரிய, விஷ்வ பெர்ணாண்டோ, கசுன் ராஜித உள்ளிட்டோரைக் கொண்ட இலங்கையின் பந்துவீச்சுக் குழாமானது வேகமாக ஓட்டங்களைக் பெறும் இங்கிலாந்தின் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதிலேயே இலங்கையின் வெற்றிவாய்ப்பு தங்கியுள்ளது.

தவிர சிரேஷ்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் உள்ளிட்டோரிடமிருந்தும் நீண்ட இனிங்ஸ்கள் தேவைப்படுகின்றன.

மறுபக்கமாக பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் ஒலி போப், ஹரி ப்ரூக் போன்றோருக்கான எதிர்காலத் தேர்வாக இத்தொடர் காணப்படுவதுடன், ஜோ றூட்டுக்கு கூடுதல் துடுப்பாட்டப் பொறுப்பும் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X