2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், லீட்ஸில் சனிக்கிழமை (21) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஹரி ப்றூக், தமதணி களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 44.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் காரி 74 (67), அணித்தலைவர் மிற்செல் மார்ஷ் 60 (59) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பிறைடன் கார்ஸ் 3, மத்தியூ பொட்ஸ், அடில் ரஷீட், ஜேக்கப் பெதெல் ஆகியோர் தலா 2, ஒலி ஸ்டோன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 271 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 40.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களையே பெற்று 68 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜேமி ஸ்மித் 49 (61) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் 3, கிளென் மக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அடம் ஸாம்பா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக காரி தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .