Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான மற்றும் அதற்கு முன்னதான இந்தியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்துக் குழாமில் ஜோ றூட் இடம்பெற்றுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரிலேயே இறுதியாக விளையாடியிருந்த றூட், ஓராண்டுக்குப் பின்னர் தற்போதே மீண்டும் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமொன்றில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை ஜேமி ஒவெர்ட்டன், பிறைடன் கார்ஸ், சஹிப் மஹ்மூட், ஜேக்கப் பெத்தெல், ஜேமி ஸ்மித் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில் சாம் கர்ரன், றீஸ் டொப்லி, வில் ஜக்ஸ், மத்தியூ பொட்ஸ் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: ஜொஸ் பட்லர் (அணித்தலைவர்), ஜொஃப்ரா ஆர்ச்சர், குஸ் அட்கின்ஸன், ஜேக்கப் பெத்தெல், ஹரி ப்றூக், பிறைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஒவெர்ட்டன், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷீட், ஜோ றூட், சஹிப் மஹ்மூட், பில் ஸோல்ட், மார்க் வூட்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago