2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளை அவுஸ்திரேலியாவுன், அடுத்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வென்ற நிலையில் பிறிஸ்டலில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஐந்தாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றமையையடுத்தே 3-2 என்ற ரீதியில் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பென் டக்கெட்டின் 107 (91), அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் 72 (52), பில் ஸோல்டின் 45 (27), அடில் ரஷீட்டின் 36 (35) ஓட்டங்களோடு ஆரோன் ஹார்டி (2), அடம் ஸாம்பா (2), கிளென் மக்ஸ்வெல், ட்ரெவிஸ் ஹெட்டிடம் (4) விக்கெட்டுகளை இழந்து 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 309 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 310 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 20.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றபோது மழை குறுக்கிட்ட நிலையில் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறையில் அப்போது 117 ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டிய அவுஸ்திரேலியா 49 ஓட்டங்களால் வென்றது. துடுப்பாட்டத்தில் மத்தியூ ஷோர்ட் 58 (30), அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 36 (48), ஹெட் 31 (26), ஜொஷ் இங்லிஸ் ஆட்டமிழக்காமல் 28 (20) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மத்தியூ பொட்ஸ், பிறைடன் கார்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் ஹெட் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .