Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 மார்ச் 02 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி கெமரூன் க்ரீனின் அபார சதம் காரணமாக 383 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கடைசி வரை களத்தில் இருந்த கெமரூன் க்ரீன், 174 ஓட்டங்களை விளாசி அசத்தினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 179 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 71 ஓட்டங்கள் சேர்த்தார். அதேபோல அவுஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலமாக அஸ்திரேலியா அணி 204 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் வந்த அஸ்திரேலியா அணிக்கு 2வது இன்னிங்ஸ் அதிர்ச்சியுடன் தொடங்கியது. தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் டக் ஆட்டமிழக்க, இன்னொரு பக்கம் லபுஷேன் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. தொடர்ந்து 3வது நாள், நியூசிலாந்து அணியின் வீரர் கிளென் பிலிப்ஸின் சுழலில் சிக்கி கவாஜா 28 ரன்களிலும், ஹெட் 29 ஓட்டங்களிலும், மிட்செல் மார்ஷ் டக் ஆட்டமிழந்த நிலையில், கேரி 3 ஓட்டங்களில், க்ரீன் 34 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் அவுஸ்திரேலியா அணி 164 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
சிறப்பாக ஆடிய கிளென் பிலிப்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட் கீப்பரான கிளென் பிலிப்ஸ் தற்போது நியூசிலாந்து அணிக்கு அசத்தலான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 369 ஓட்டங்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 56 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago