2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆப்கானிஸ்தானிடம் தோற்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 23 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென். வின்சென்டில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு ஒன்று சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலியா தோற்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

ஆப்கானிஸ்தான்: 148/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 60 (49), இப்ராஹிம் ஸட்ரான் 51 (48), கரிம் ஜனட் 13 (09), மொஹமட் நபி ஆ.இ 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 3/28 [4], அடம்ஸாம்பா 2/28 [4], அஸ்தன் அகர் 0/17 [4], கிளென் மக்ஸெவ்ல் 0/12 [2])

அவுஸ்திரேலியா: 127/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 59 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்படின் நைப் 4/20 [4], நவீன்-உல்-ஹக் 3/20 [4], மொஹமட் நபி 1/1 [1], ரஷீட் கான் 1/23 [4], அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 1/10 [1.2], பஸல்ஹக் பரூக்கி 0/21 [3])

போட்டியின் நாயகன்: குல்படின் நைப்

இப்போட்டியின் ஆப்கானிஸ்தானின் இனிங்ஸின் 18ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அணித்தலைவர் ரஷீட் கானின் விக்கெட்டைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் பற் கமின்ஸ், 20ஆவது ஓவரின் முதலாம், இரண்டாம் பந்துகளில் கரிம் ஜனட், குல்படின் நைப்பின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டாவது ஹட்-ட்ரிக் சாதனையைப் படைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .