Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த வீரராக பிரேஸிலின் வினிஷியஸ் ஜூனியர் செவ்வாய்க்கிழமை (17) பெயரிடப்பட்டுள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் வினிஷியஸ் 39 போட்டிகளில் 24 கோல்களைப் பெற்றிருந்தார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் றொட்றி, சக றியல் மட்ரிட் வீரரான ஜூட் பெல்லிங்ஹாமைத் தாண்டியே இவ்விருதை 24 வயதான வினிஷியஸ் பெற்றுள்ளார்.
ஆர்ஜென்டீனாவின் எமிலியானோ மார்ட்டினெஸ் சிறந்த கோல் காப்பாளராகத் தெரிவாகியதோடு, மட்ரிட்டின் கார்லோ அன்சிலோட்டி சிறந்த பயிற்சியாளராகத் தெரிவாகியுள்ளார்.
ஆண்டின் சிறந்த அணியில் வினிஷியஸ், றொட்றி, பெல்லிங்ஹாம், மார்டினெஸ் தவிர மட்ரிட்டின் டொனி க்றூஸ், டனி கர்வகால், அந்தோனியோ ருடிகர், சிற்றியின் ருபென் டியஸ், எர்லிங்க் ஹலான்ட், பார்சிலோனாவின் யமால், ஆர்சனலின் வில்லியம் சலிபா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago