Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றின் முதலாவது போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அர்னோவிச் பெற்றிருந்தார்.
இதேவேளை, நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் சமப்படுத்தியது. ஐந்தோவன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லுக் டி ஜொங் பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொன்யெல் மலென் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .