Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஜூலை மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை விருதை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வென்றெடுத்துள்ளார்.
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற மகளிர் T 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சமரி அத்தபத்து துடுப்பாட்டத்தில் அற்புதமான ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதமும் இந்த வருடம் மே மாதமும் ஐசிசி அதிசிறந்த வீராங்கனை விருதுகளை வென்றதன் மூலம் இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மூன்றாவது வீராங்னை ஆனார் சமரி அத்தபத்து.
அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், மேற்கிந்தியத் தீவுகளின் ஹெய்லி மெத்யூஸ் ஆகியோரே இந்த விருதை மூன்று தடவைகள் வென்ற மற்றைய இருவராவர்.
அத்துடன் 2023ஆம் ஆணடுக்கான ஐசிசி அதிசிறிந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் சமரி அத்தபத்து தனதாக்கிக் கொண்டிருந்தார்.
இந்த விருதுகளை சீரான இடைவெளியில் பெற்ற சமரி அத்தபத்து தனது அதிசிறந்த ஆற்றல் மூலம் இந்தியாவுக்கு எதிரான ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்து தனது நாடு முதல் தடவையாக ஆசிய மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க உதவினார்.
ஐந்து போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைச் சதங்களுடன் 304 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவரது துடுப்பாட்ட சராசரி 101.33 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 146.85 ஆகவும் அமைந்திருந்தது.
மலேசியாவுடனான போட்டியில் சதம் குவித்த சமரி அத்தபத்து, பாகிஸ்தானுடனான அரை இறுதிப் போட்டியிலும் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அரைச் சதங்களைப் பெற்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago