Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 16 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா மோசமான சாதனை படைத்துள்ளார். அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் தற்போது அவர் உள்ளார்.
36 வயதான ரோகித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 150 டி20 போட்டிகளில் விளையாடி 3,853 ஓட்டங்களை குவித்துள்ளார். 4 சதங்கள் மற்றும் 29 அரைசதங்கள் இதில் அடங்கும்.
அதிக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் 12 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டக் அவுட் ஆன வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோகித் விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆகியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .