Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஜூலை 30 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக மாக்சிய லெனினிச கட்சியின் 45வது ஆண்டு விழாவும், பகிரங்க பொது கூட்டமும் மாத்தளை நகர சபை மண்டபத்தில் (30) காலை இடம்பெற்றது.
இந்த நாட்டின் இடதுசாரி இயக்க வரலாற்றில் சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சி அதிகாரத்தின் அடக்குமுறைக்கும், ஏகாதிபத்திய அதிகார அடக்குமுறைக்கும் மத்தியில் தேசிய இனங்களின் விடுதலைக்கு உழைக்கும் கட்சியாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி திகழ்கின்றது.
மேலும் மக்களின் அதிகாரத்தை முன்னிறுத்தி வெகுஜன அரசியல் மார்க்கத்தை முன்னெடுத்து வருகின்ற கட்சியின் தனது 45வது ஆண்டுகளாக தனது வெகுஜன அரசியலை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் இன்று 45வது ஆண்டு விழாவினை கொண்டாடும் இக்கட்சி பகிரங்க பொது கூட்டம் ஒன்றையும் நடத்தியது.இக் கூட்டத்தில் தலைமை உரையை தோழர் ச.பன்னீர் செல்வம் நிகழ்த்தியதுடன் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பில் உரையாற்றினார்.
அத்துடன் இந்த நிகழ்வில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு செப் மோகன் ,வன்னி மாவட்ட செயலாளர் நீ.பிரதீபன், வடபிராந்திய செயலாளர் க.தணிகாசலம் ஆகியோருடன், கட்சியின் பொது செயலாளர் சி.கா.செந்திவேல்,தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன்,மலையக பிராந்திய செயலாளர்.டேவிட் சுரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஆ.ரமேஸ்
ஆ.ரமேஸ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago