2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ஹசீனாவை அனுப்ப கோரி ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 ஒக்டோபர் 28 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை - பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில்  கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் திங்கட்கிழமை (28) அன்று தூதரக முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் அந்நாட்டு மாணவ இயக்கங்கள், எதிர்கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் மக்கள் திரண்டு கிளர்ச்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது.



அதன்போது நிறைய கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாங்கத்தினால் கொல்லப்பட்டனர். இதனால் உக்கிரமடைந்த கிளர்ச்சியால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான 45 பேர் இந்தியாவுக்கு தப்பி சென்றனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு  உயர் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் அவர்களை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



இருந்தபோதிலும் தப்பிச்சென்ற அவர்களை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. அதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும். ஷேக் ஹசீனா வையும், இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளோர்களையும் உடனடியாக பங்களாதேசுக்கு திருப்பியனுப்ப கோரியே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் போராட்டகாரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.



இது விடயம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரொன்றையும் கையளித்தனர்.

 நூருல் ஹுதா உமர்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .