2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

வெள்ளத்தால் தத்தளித்த புத்தளம்

Janu   / 2024 மே 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகர சபைக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், தில்லையடி, ரத்மல்யாய , பாலாவி ஆகிய கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கின.

மேலும், நாத்தாண்டிய, முந்தல், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களும் , விவசாய நிலங்களும் இவ்வாறு வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்  கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

இதன்படி இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 2 அடி உயரத்திலும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 3 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1050 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி நீரும் வெளியேறுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்  கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X