Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 ஜூலை 04 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் வியாழக்கிழமை (04) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
3 hours ago