Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 மே 12 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று (12) இடம்பெற்றது
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது 2009ஆம் ஆண்டு இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவையும் நிலையில் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ளது
இன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவுப்படுத்தும் முகமாக அரிசி மற்றும் உப்பு போடப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த இடத்திற்கு பாதுகாப்பு கடமைகளுக்கு வருகை தந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வாளர்களுக்கு முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago