Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 24 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நற்பிட்டிமுனையில் “பாடசாலை எங்களுடையது" மாபெரும் நடைபவனி
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சுமார் 75 வருட கால வரலாற்றைக் கொண்ட நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த சமூகத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தும் “பாடசாலை எங்களுடையது" எனும் மாபெரும் நடைபவனி (23) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எல். பதியுத்தீன் தலைமையில் பாடசாலையின் பிரதான முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவணி பிரதான வீதி வழியாக பிரதேசத்தின் எல்லை பகுதிக்கு சென்று மீண்டும் உள்;ர் வீதிகளின் ஊடாக பயணித்து அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக கொழும்பு சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையின் கதிரியக்க வைத்திய நிபுணரும் பாடசாலையின் பழைய மாணவருமான வைத்தியர் டொக்டர் வை. உபைத்துல்லாஹ் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக ஓய்வு பெற்ற ஆசிரியரும், முன்னாள் அல்- ஹாமியா அரபுக் கல்லூரியின் அதிபருமான அல்ஹாஜ். மௌலவி யூ.எல் ஏ. கபூர் (பலாஹி) கலந்து கொண்டார்.
நடைபவனியின் போது, பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 'நேத்ரா” அலைவரிசை தமிழ் செய்தி பிரிவு பணிப்பாளர் ஏ.பி.எம் சியாம் உட்பட பாடசாலையின் பழைய மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர். ஏ.எல்.எம்.ஷினாஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
5 hours ago