2025 பெப்ரவரி 03, திங்கட்கிழமை

மஹா கும்பாபிஷேகம்…

Mayu   / 2024 மே 19 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19)  சிறப்பாக நடைபெற்றது.  

சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து   சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டன. 

இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் சரயு ஆற்றில் இருந்து 25 லீற்றர் புனிதநீர் கொண்டு வரப்பட்டது. அந்த புனித நீர், ஆலயத்தின்  கலசத்தில் ஊற்றி சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

செ.திவாகரன்  , ஆ.ரமேஸ்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X