2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

மழையால் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 காலநிலை மாற்றத்தை அடுத்து  ஞாயிற்றுக்கிழமை (30.04.2023) காலை முதல் தொடர்ச்சியாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பெய்த மழைக் காரணமாக பார்க் தோட்டத்திலிருந்து கந்தப்பளை கல்பாலம் வரை பெருக்கெடுத்து ஓடும் பாம்பன் ஆற்று நீர் விவசாய காணிகள்,மற்றும் வீடுகளுக்கு உட்புகுந்த நிலையில் மரக்கறி பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியது.அதேநேரத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் இப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ள நீர் பெருக்கெடுத்து காரணமாக பிரதான வசதிகளும் நீரில் மூழ்கி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஹட்டனுக்குச் செல்லும் பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது.

(ஆ.ரமேஸ், செ.திவாகரன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .