2025 மார்ச் 13, வியாழக்கிழமை

மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு போராட்டம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பூநகரியில் மதுபான சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச பொது அமைப்புகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது

 குறித்த போராட்டமானது இன்று (05/09) பூநகரி சங்குப்பிட்டி வீதியின் பழைய பிரதேச செயலக வளாகம் முன்றில் இருந்து பேரணி ஆரம்பமாகி  புதிய பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது 

பூநகரி பிரதேசத்தின்  மையப் பகுதியான வாடியடி பகுதியில் உணவகத்துடன் கூடிய மதுபான சாலை ஒன்று பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில்  ஏற்கனவே இயங்கி வருகின்றது 

இந்த நிலையில் அதனை மதுபான விற்பனை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்​கமைய பிதேச செயலகத்தை சென்றடைந்த பேரணியின் இறுதியில் பிரதேச செயலாளர் மற்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கான மகஜர்களும் கையளிக்கப் பட்டுள்ளன.

இப்போராட்டத்தில்  பூநகரி பிரதேசத்தை சேர்ந்த பொது அமைப்புகள் பெண்கள் வலை அமைப்பு பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

யது பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .