Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 16, சனிக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணம், ஹட்டன் வலயம், வட்டவளை, மவுண்ஜீன் தமிழ் வித்தியாலயத்திற்கு கொரியன் father mr E. B. Chung உள்ளிட்ட குழுவினரால் இரண்டு வகுப்பறைகள் கொண்ட மண்டபம் ஒன்று வழங்கப்பட்டு புதன்கிழமை(23) திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, கடந்த 3 வருடங்களாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. கடந்த நான்கு வருடங்களாக கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
2024 ஆம் ஆண்டு தமிழ்த் தின போட்டியில் கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தவணை பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களும், கடந்த காலங்களில் கடமை புரிந்த அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவிற்கு ஹட்டன் வலய கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் வருகைதந்ததுடன் அயல் பாடசாலை அதிபர்களும் நலன் விரும்பிகள் வருகை தந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago