Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 21 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல். ஜவ்பர்கான் , கனகராசா சரவணன், எப்.முபாரக் , அ .அச்சுதன் , யது பாஸ்கரன், சஞ்சீவன் துரைநாயகம், செ.கீதாஞ்சன், ஏ.எம்.கீத்
சர்வதேச நீதிப்பொறிமுறையினை வேண்டி திருகோணமலையில் போராட்டம் இன்று (21) இடம் பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இடம் பெற்ற குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்களை விசாரனை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறு கோரியே இப்போராட்டம் இடம் பெற்றது.
பாலியல் குற்றங்களுக்கு உடன் சர்வதேச விசாரனை வேண்டும், நீதிப்பொறிமுறையை உறுதிப்படுத்து போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மகஜர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இவ்கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago