Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் 2024 அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு சனிக்கிழமை (03) காலை முதல் மாலை வரை காரைதீவு கலாச்சார மண்டபத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதிச்செயலாளர் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யோகராஜா சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரக்காந்தன் (பிள்ளையான்) கலந்து சிறப்பித்தார்.
தொடர்ந்து கட்சியின் பிரதம பொருளாளர் ஆ.தேவராசா கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளருமான தம்பிராஜா தஜிவரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago