Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 மார்ச் 24 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரும், தேசப்பிதா என்று பெயர் பெற்றவருமான மேதகு டி.எஸ். சேனநாயக்காவின் 73வது நினைவு விழா கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் மார்ச் 22 ஆம் திகதியன்று நடைபெற்றது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள டி.எஸ். சேனநாயக்கவின் சிலைக்கு நினைவுக் குழுவின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜெயசூரிய உள்ளிட்ட விருந்தினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, முன்னாள் அமைச்சர் கருணாசேன கொடிதுவக்கு, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நினைவு நிகழ்வில் பிரசங்கத்தை கொள்ளுப்பிட்டி, பொல்வத்த, ஸ்ரீ தர்ம கீத்யாராமயத்தின் பீடாதிபதி கலாநிதி பண்டாரவளை விமலதம்ம தேரர் நிகழ்த்தினார்.
டி.எஸ். சேனநாயக்க நினைவுக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ விருந்தினர் உரையை நிகழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .