Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூலை 02 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு இன்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து வழங்கியது "முத்து ராஜா" அல்லது "சக்சுரின்" யானை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அந்த யானை கொண்டு வரப்பட்டது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து யானையை அதிகாலை சுமார் 12:00 மணியளவில், யானையை மிகவும் மெதுவாகவும், எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது விசேட வாகனம் அழைத்து வந்தது.
இந்த யானை அடங்கிய சிறப்பு கூண்டு தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லும் ரஷ்ய "இல்லூஷன்-76" விமானத்தில் காலை 4.30 மணிளவில் ஏற்றத் தொடங்கியது.
இந்த விமானம் காலை 07.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள "Xianmai" விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.
4 ஆயிரம் கிலோகிராம் நிறையைக் கொண்ட அந்த யானையை கொண்டுச் செல்வதற்காக ஒருவழி செலவாக 7 இலட்சம் டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது.
முறையாக பராமரிக்காமையை அடுத்தே அந்த யானை நோய்வாய்ப்பட்டது என்றும், யானையை தங்களுக்கு திரும்பித்தருமாறு தாய்லாந்து இலங்கையிடம், 2022 ஆம் ஆண்டே கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
4 hours ago
5 hours ago