2025 மார்ச் 13, வியாழக்கிழமை

சின்ன இங்கிலாந்தில் டெங்கொழிப்பு...

Freelancer   / 2023 மே 28 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகமும், நுவரெலியா மாநகர சபையும் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.

நுவரெலியாவில் டெங்கு பரவினால் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதால் டெங்கு பரவக்கூடிய இடங்களை தூய்மைபடுத்துமாறு மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன் முதற்கட்டமாக நுவரெலியா கிரகரி வாவி குதியில் மாவட்ட செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. உள்ளுராட்சிமன்ற நிறுவனங்கள், தோட்ட நிர்வாகங்கள், கிராமியக்குழுக்களையும் இணைத்துக்கொண்டு நுவரெலியா மாவட்டம் முழுதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.கணேசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .