Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும் சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.
யானைகள் - மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து, போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
42 minute ago
55 minute ago
1 hours ago